சுமந்திரனுக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் கடும் வாய்த் தர்க்கம் - ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக  நீக்குமாறு உத்தரவு

Published By: Digital Desk 2

21 Nov, 2022 | 09:51 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.சி.வசீம்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு  இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட  கடும்  தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த  ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக  நீக்குமாறு உத்தரவிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவ. 21) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆம்  நாள் விவாதத்தில்  இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்   உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

வரவு -செலவுத் திட்ட விவாதத்தின் போது  சபையில் உரையாற்றிய  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீது  முன் வைத்த பல  மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு இராஜாங்க  அமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையில் பதில் வழங்கியதுடன் இரா. சாணக்கியன் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிய நிலையிலேயே சுமந்திரன் அவருடன்  தர்க்கத்தில்  ஈடுபட்டார் .

பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் அவ்வேளை சபையில் இல்லாத நிலையில் அவர் தொடர்பில் இராஜாங்க  அமைச்சர் சந்திரகாந்தனினால் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாதென சுமந்திரன். ஒழுங்குப்பிரச்சினை எழுப்பியதனையடுத்தே இருவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.

எனினும் சாணக்கியன் தொடர்பில் இராஜாங்க  அமைச்சர் சந்திரகாந்தன் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த நிலையில் மீண்டும் எழுந்த சுமந்திரன்  இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் எதிர்ப்புத்தெரிவித்ததுடன் அதனை சபைக்கு  தலைமை தாங்கிய பிரேம்நாத் சி தொலவத்தவின்  கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் இராஜானகி அமைச்சர் சந்திரகாந்தன் மீது   குற்றச்சாட்டொன்றை முன் வைத்தார்.  இதனையடுத்தே இருவரின் கருத்துக்களையும் ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு சபைக்கு  தலைமை தாங்கிய பிரேம்நாத் சி. தொலவத்த உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27
news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31