மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து விலகிச்செல்கின்றன

Published By: Rajeeban

21 Nov, 2022 | 04:14 PM
image

ani

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து விலகிச்செல்லதொடங்கியுள்ளன.

முன்னர் ஒருகாலத்தில் மிகவும் வெற்றிகரமானதாக காணப்பட்ட சீனாவின் 17 பிளஸ் 1 மத்திய கிழக்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பு மன்றத்தின் எண்ணிக்கை தற்போது 14 ஆக குறைவடைந்;துள்ளது.

உக்ரைன் யுத்தத்தின் மத்தியில் சீனா ரஸ்யாவுடன் நெருக்கமான உறவை பேணுவதால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து விலகிச்செல்ல ஆரம்பித்துள்ளன.

சீனாவும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் 2012 இல் 16 பிளஸ் 1 என்ற பொருளாதார ஒத்துழைப்பு முயற்சியை ஆரம்பித்தன.

அந்த தருணத்தில் கிழக்கு ஐரோப்பாவின் அனேக நாடுகளான போலந்து ஹங்கேரி ருமேனியா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இணைந்துகொண்டன என நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது.

2019 இல் கிரேக்கம் இந்த அமைப்பின் உறுப்பு நாடாகியதை தொடர்ந்து இந்த அமைப்பு 17 பிளஸ் 1 ஆக மாறியது.

வருடாந்தம் இராஜதந்திர கூட்டங்களும் சந்திப்புகளும் இடம்பெற்றன.

சீனா இந்த நாடுகளை உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கியது.

ஆனால் சிறந்த நாட்கள் நீண்டநாட்களிற்கு நீடிக்கவில்லை,சீனா குறித்து அதிகரித்துவரும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் லித்துவேனியா சீனாவின் 17 பிளஸ் 1 என்ற அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது.

2022ஆகஸ்;டில் லட்வியா எஸ்டொனியா ஆகியன விலகியதை தொடர்ந்து இந்த அமைப்பு 14 பிளஸ் ஓன்றாக குறைவடைந்துள்ளது.

அடுத்து இந்த அமைப்பிலிருந்து செக் குடியரசு வெளியேறக்கூடும் என நிக்கே ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் அந்த நாட்டின் வெளிவிவகார குழு தனது நாடு இந்த அமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

ரஸ்யா குறித்த சீனாவின் நிலைப்பாடே இதற்கு முக்கிய காரணமாக காணப்படுகின்றது.

ரஸ்யாவுடன் கசப்பான உறவுகளை கொண்டுள்ள இந்த நாடுகள் உக்ரைனிற்கு எதிரான ரஸ்யாவின் நடவடிக்கைகளை சீனா கண்டிக்கவேண்டும் என வர்ணிக்கின்றன - ஆனால் இது யதார்த்தமான விடயமல்ல.

2010 இன் ஆரம்பத்தில் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வந்த வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கான நிதியை கொண்டிருந்த சீனாவை நோக்கி கிழக்கு ஐரோப்பிய மத்திய ஐரோப்பிய நாடுகள் கவரப்பட்டன.

எனினும் பின்னர் சீனாவுடனான ஒத்துழைப்பு என்பது கனவு என்பதை இந்த நாடுகள் உணர்ந்தன.

கெடுபிடி காலத்தின் சோவியத்பூனியனின் யுகத்தை இந்த நாடுகள் மனதில் வைத்துள்ளன.

சீனா தொடர்ந்தும் விளாடிமிர் புட்டினின் ரஸ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுகின்றது.இதன் காரணமாக பல நாடுகளின் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது என நிக்கி ஏசியா தெரிவிக்கின்றது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் இராணுவநடவடிக்கைக்கு பின்னரும் சீனா ரஸ்யாவுடன் நெருக்கமான உறவுகளைகொண்டுள்ளதால் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனா குறித்து சீற்றமும் அதிருப்தியும் கொண்டுள்ளன என தெரிவிக்கின்றார் போலந்தின் கிழக்கு ஐரோப்பாவிற்கான கற்கை நிலையத்தை சேர்ந்த

சோவியத் யுகத்தின் வேதனை மிகுந்த அனுபவங்கள் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த நாடுகள் கம்யுனிச சித்தாந்தத்தை வெறுக்கின்றன சீனாவின் அரசமுறை குறித்து மோசமான எண்ணங்களை கொண்டுள்ளன- பிராந்திய நாடுகள் சீனாவிடமிருந்து விலகிச்செல்லும் போக்கு நிற்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீன எதிர்ப்புகளின் தாக்கத்;தை கிழக்குஐரோப்பிய நாடுகளிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் காணமுடிகின்றது.

உதாரணத்திற்கு ருமேனிய அரசாங்கம் சீனா வர்த்தகர்கள் உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04