'ஏஜென்ட் கண்ணாயிரம்' நகைச்சுவை படமல்ல - சந்தானம்

By Nanthini

21 Nov, 2022 | 04:06 PM
image

மிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முன்னேறிவரும்  ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், 'ஏஜென்ட் கண்ணாயிரம்' முழு நீள நகைச்சுவை படமல்ல. சீரியஸான, அனைவரும் ரசித்துப் பார்க்கக்கூடிய திரைப்படம் என அப்படத்தின் நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

'வஞ்சகர் உலகம்' எனும் படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. 

இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், குரு சோமசுந்தரம், ஈ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தேனீ ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். புலனாய்வு பாணியிலான நகைச்சுவை, த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லேப்ரிந்த் பிலிம்ஸ் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இம்மாதம் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும்  இத்திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்குபற்றிய நடிகர் சந்தானம் பேசுகையில், 

"நான் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படங்களில் எல்லாம் பார்வையாளர்கள் நகைச்சுவையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் நான் நகைச்சுவை வேடத்தில் நடிக்கவில்லை. இது முழு நீள நகைச்சுவை படமும் அல்ல. 

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய்' எனும் படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டேன். புகையிரதத்தின் மேல் பகுதியில் நடைபெறும் சண்டைக் காட்சிகளில் பங்குபற்றி நடித்திருக்கிறேன். இதுபோன்ற பல சாகச செயல்களை செய்திருக்கிறேன். இருப்பினும், இந்த படத்தில் தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்யும்'' என்றார்.

இதனிடையே 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் மலேசியாவில் வாழும் இந்திய மொடலிங் மங்கையான வனீஸா குரூஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே 'கபாலி' படத்திலும், விரைவில் வரவிருக்கும் 'வாரிசு' மற்றும் 'துணிவு' படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சந்தானத்தின் திரைப்படங்கள் வணிக ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெறவில்லை என்றாலும், திரைப்பட வணிகர்களை நஷ்டமடைய செய்வதில்லை என்பதால் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53