தமிழின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் 'தூக்குதுரை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ட்ரிப்' எனும் திரைப்படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் தயாராகும் 'தூக்குதுரை' படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், சென்ராயன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு கே.எஸ். மனோஜ் இசையமைத்திருக்கிறார். கொமடி, த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்களான அரவிந்த் வெள்ளை பாண்டியன் மற்றும் அன்பு ராசு கணேசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு, இனியா, பால சரவணன், சென்ராயன், மகேஷ் போன்ற நட்சத்திரங்கள் தோன்றுவதுடன், பின்னணியில் பேய் பங்களா ஒன்றும், அஜித், விஜய், மோகன் ஆகிய நட்சத்திரங்களின் புகைப்படங்களை தாங்கிய வாகனம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. இது ரசிகர்களை கவர்ந்திருப்பதால், இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM