ஆறுமாதங்களிற்கு பின்னர் சீனாவில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் பல நகரங்களில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பெரும் போராட்டத்தில் சீனா ஈடுபட்டுள்ள நிலையிலேயே உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கின்றமை அதன் பூஜ்ஜிய கொவிட் கொள்கையை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
சனிஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 27000 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏப்பிரல் நடுப்பகுதிக்கு பின்னர் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை நேற்றே என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கடந்த ஆறு நாளாக 20,000க்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறுதியாக மே 26ம் திகதி சங்காயில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து அந்த நகரம் ஜூன் மாதம் வரை மூடப்பட்டது.
உலகின் மிகப்பெரும் பொருளாதாரமான சீனா தொடர்ந்தும் முடக்கலை நடைமுறைப்படுத்தி வருகின்றது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக சீனா பூஜ்ஜிய சீன கொள்கையை இறுக்கமாக பின்பற்றி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM