(எம்.மனோசித்ரா)
உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று , பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்வதற்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும்.
எனவே பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் திங்கட்கிழமை (நவ.21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சி பேதங்களைத் துறந்து வழமையான அரசியல் கலாசாரத்திலிருந்து வெளியேறி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மிகவும் நெருக்கடியானதொரு சூழலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இறுதி யுத்த கால கட்டத்தின் போது , அதனை நிறைவுக்குக் கொண்டு வருவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு விடுத்தார்.
அதனை ஏற்று அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கியமையால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. ஒற்றுமையால் பயங்கரவாதத்தை தோற்கடித்ததைப் போன்று, பொருளாதார நெருக்கடி என்ற யுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.
தற்போது சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் எமது அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் அவதானம் செலுத்த வேண்டும்.
ஆனால் ஒரு சில தரப்பினர் வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய செயல் அல்ல.
நாட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் வீதம் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் , ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு வீதிகளை மூடி வைத்துக் கொண்டிருப்பது நாகரிகமான செயல் அல்ல.
எனவே குறுகிய நோக்கங்களுக்காக செயற்படுபவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது எதிர்தரப்பினர் அனைவரும் பஷில் ராஜபக்ஷவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
அவரால் எதுவுமே முடியாது என்று விமர்சித்தவர்களே இன்று அவரைக் கண்டு அஞ்சுகின்றனர். ஏன் இந்த அச்சம்? பயத்தை விடுத்து அவரை அவரது செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுத்துச் செல்ல இடமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM