கலைஞர்களின் தரவுத் தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் வேலைத்திட்டம்

By Ponmalar

21 Nov, 2022 | 03:09 PM
image

நூருல் ஹுதா உமர்

புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சானது, கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் மூலம் செயற்படுத்தப்படும் கலைஞர்களுக்கான ஒரு தரவுத்தளத்தை தாபித்தல் மற்றும் இற்றைப்படுத்தல் பற்றிய கருத் திட்டத்தின் கீழ் கலைஞர்களை ஒன்லைன் ( Onine ) ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் கலைஞர்களின் தகவல்களை திரட்டும்  நோக்கில் தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை www.heritagemgiv.lk எனும் இணையத்தளம் ஊடாக அல்லது My Heritage எனும் Mobile Application மூலமாக கலைஞர்கள் தாங்களாகவே பதிவுசெய்து கொள்ளமுடியும். அதற்கான விளம்பர சுவரொட்டிகள் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் கலாசாரப் பிரிவு விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், மற்றும் இறக்காமம் பொதுநூலகம், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கலை மன்ற உறுப்பினர்களுக்கு கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ. நௌபீஸா, ஏ.எல்.பரீனா மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

www.heritage.gov.lk என்ற  இணைத்தளத்தில் பிரவேசித்து கலைஞர்கள் பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு செய்து கொள்ளும் கலைஞர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படும். இதன் ஊடாக சந்தை வாய்ப்புகளும் உருவாகும் . கலை ஆக்கங்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் கலைஞர்களின் கலை சார்ந்த தொழிலை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50