அரசின் வரவும் - செலவும் மக்களின் எதிர்பார்ப்பும்

Published By: Digital Desk 5

21 Nov, 2022 | 01:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சவால் மிக்கதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது.  வரி அதிகரிப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ள பாதீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு,நிவாரணம் வழங்கல் என வரவு செலவுத் திட்டத்தின் பாரம்பரிய எதிர்பார்ப்புகள் இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதையும்,நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதையும் இந்த வரவு செலவுத் திட்டம் புதிதாக முன்னிலைப்படுத்தியுள்ளது.2023 ஆம் ஆண்டு அரச வரி வருமானத்தை 3130 பில்லியன் ரூபாவாக திரட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.பாதீட்டின் சாதக மற்றும் பாதக காரணிகள் கடந்த ஐந்து நாட்களாக விவாதிக்கப்பட்டன.இலங்கை முதல் முறையாக வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் இந்த வரவு செலவுத் திட்டம் பல சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு கொள்ள வேண்டும்.

பாரம்பரியமான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான ஆரம்பம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையில் சுட்டிக்காட்டினார்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக நிவாரணம் வழங்க எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு,அரச செலவுகளை குறைத்தல் ஆகிய விடயங்களி;ல் நாணய நிதியம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.ஆகவே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாணய நிதியத்தின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை –புதிய பயணத்தை நோக்கிய ஆரம்பம்'என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரம் குறித்து முழு உலகமும் கவனம் செலுத்தியது.பொருளாதாரம் தற்போதும் ஸ்தீரமான நிலையில் இல்லை.

2023- வரவு செலவுத் திட்ட மதிப்பீடு

2023 நிதியாண்டின் மொத்த அரச வருமானம் 3415 பில்லியன் ரூபாவாகவும்,மொத்த செலவு 5819 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.வரவு மற்றும் செலவுகளுக்கு இடையிலான பற்றாக்குறை 2404 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த பற்றாக்குறை மொத்த தலதேசிய உற்பத்தியில் 7.9 சதவீதமாக காணப்படுகிறது.2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 2333 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.(மொத்த தேசிய உற்பத்தி 9.8 சதவீதம்).இவ்வாறான பின்னணியில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி வருமானம்

வரி அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுபவர் முதல் மில்லியன் கணக்கில் மாத சம்பளம் பெறுபவர் வரை தாக்கம் செலுத்தியுள்ளது.வீழ்ச்சியடைந்துள்ள அரச வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் பல வரிகளை திருத்தம் செய்து வரி வீதத்தை அதிகரித்துள்ளது.நாட்டின் அனைத்து துறைகளிலும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.வரி அறவிடல் ஊடாக தேசிய வருமானத்தை குறுகிய காலத்திற்குள் ஈட்டிக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.அதற்கமைய 2023 ஆம் ஆண்டு அரச வரி வருமானத்தை 3130 பில்லியன் ரூபாவாக திரட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரச செலவு

2022ஆம் ஆண்டு அரச செலவு 4427 பில்லியனாக காணப்படும் பட்சத்தில் 2023  ஆம் ஆண்டு அரச செலவை 5819 பில்லியன் ரூபாவாக அதிகரித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த வருடத்தை காட்டிலும் அடுத்த வருடம் அரச செலவு 1392 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி திட்டங்கள் வெளிப்படை தன்மையுடன் காணப்பட வேண்டும்,நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கு தகுதியான தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஒருசிலர் சாதகமாக கருத்துக்களையும்,ஒரு சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். பாரம்பரியமான வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிறிதொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வது எவ்வாறு என்பது தொடர்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14