மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலிக்கு ஏற்பாடுகள்

Published By: Vishnu

21 Nov, 2022 | 11:12 AM
image

எங்களது இனத்தின் தேச விடுதலைக்காக தங்களது இன்னுயிரை ஆகுதியாக்கிய அத்தனை மாவீரர் செல்வங்களையும் இங்கே விதைத்து அவர்களது கல்லறை கற்களை வழிபடுகின்ற தழிழருடைய வழிபாட்டிலே அவர்களுடைய தியாகங்களை மதிக்கின்ற போற்றுகின்ற வரலாற்றை இலங்கை அரசு அழித்து ஒழித்திருக்கிறது என்று  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத் திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவினர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவ்விடத்திற்கு நேற்று மாலை நேரில் சென்று துயிலும் இல்ல பிரதேசத்தினை சுற்றி பார்வையிட்டு அங்கிருந்த கல்லறைகள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு கவலையுற்று அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது.

அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்து நொறுக்கி அள்ளி எங்களது உறவுகள் தங்களது உறவுகளை நினைந்து நினைவேந்தல்களைக் கூட செய்யமுடியாதவாறு வரலாற்றை முழுமையாக அழித்திருக்கக் கூடிய விடயமானது எங்களது நெஞ்சுக்கு மேலே ஏறி நின்று எங்களை அழித்ததிற்கு ஒப்பானதாக இருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான மாவீரர் செல்வங்களுடைய வித்துடல்களை தாங்கி நிற்கின்ற தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கும்போது இருக்கின்ற உணர்வு வார்த்தைகளாலே வெளிப்படுத்த முடியாது என்றார்.

அப்படியான சூழ் நிலையிலேயே தரவை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் எந்தவித கட்சி அரசியல் கலப்பும் இல்லாமல் செய்து வருகின்றனர்.

அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் ஏற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவீரர்களுடைய பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிகளை மேற்கொண்டு எதிர்வரும் கார்த்திகை 27 இல் மாவீரர் நாளை அனுஷ்டிக்க இருக்கின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்திலே அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலுக்காக இந்த மாவீரர் செல்வங்களுடைய  தியாகங்களை பயன்படுத்தவேண்டாம் என்று அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

மாவீரர்களது பெற்றோர்கள் பொதுமக்களுக்கு வழிவிட்டு அவர்கள் இந்த ஏற்பாடுகளை சிறப்பாக செய்யும் பொருட்டு அது சிறப்பாக அமையும் என்ற அடிப்படையிலேயே எதிர்வரும் கார்த்தகை 27 லே இங்கு மாவீரர் நினைவு நாள் இடம்பெறவுள்ளது.

 நீண்ட கால இடைவெளியின் பின்னர் மீண்டும் இம்முறை மாவீரர் நாள் மிகவும் தேசிய எழுச்சியாக அனைத்து துயிலும் இல்லங்களிலும் நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் அனைவரும் வந்து வழிபாடுகளை ஆற்றவேண்டும். வீரமறவர்களுக்கு எங்களுடைய வீர வணக்கத்தினை செலுத்த வேண்டும். 

அவர்களுடைய தியாகங்கள் எந்த இலட்சியத்திற்காக நடைபெற்றதோ அதே இலட்சியத்திலே எந்த வித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தமிழர்களுக்கென்று ஒரு தனியான ஒரு தேசம் அமைய வேண்டும். சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டும்  என்ற அதே இலட்சியத்திலே நாம் அனைவரும் பயணிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25