நீங்கள் உண்ணும் உணவு சைவமா ? அசைவமா?

Published By: Ponmalar

21 Nov, 2022 | 12:49 PM
image

உணவுப் பொருட்களை சைவம் அசைவம்னு பிரிச்சுப் பார்க்கும் பழக்கம் பல காலங்களாகவே தொன்றுதொட்டு தொடர்ந்துகொடேதான் இருக்கிறது.

அசைவ உணவுப் பிரியர்கள் சைவ உணவை உண்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது.  ஆனால் நான் வெஜிடேரியன் என சைவ உணவங்களை தேடிச் செல்பவார்கள். சிலர் அசைவ உணவுகளை தொடக்கூட விரும்புவதில்லை. இன்னும் சிலர் அசைவ உணவுப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

எனினும் கண்களுக்கு முன் சைவமாக தெரியுற உணவில், கண்ணுக்குத் தெரியாத அசைவம் கலந்து தயாராவது பற்றி தெரியுமா? 

நாம் சைவம் என நினைத்து உண்ணும் சிலவகை உணவுகளும், உணவைத் தயாரிக்க பயன்படும் சில மூலப் பொருட்களும் உண்மையில் சைவம் இல்லை.

அதில் கண்ணுக்குத் தெரியாத அசைவப் பொருட்கள், அதாவது, விலங்குகளின் கொழுப்பு, விலங்குகளின் எலும்பில் இருந்து தயாராகும் பொருட்கள், விலங்குகளின் இறைச்சி போன்றவை மூலப் பொருளாக கலந்திருக்கிறது என்பதே உண்மை.

எப்போதும், நீங்கள் வாங்கி உண்ணும் உணவுகள் சைவமா? அசைவமா? என்பதை வாங்கும் பொருட்களின் லேபில்களில் தகவல்களாகப் பதியப்பட்டு இருக்கும்.

எனவே அதை ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, சைவம்தான் நாம் உண்கிறோம் என்பதை உறுதி செய்துவிட்டு உண்ணவும். இனி நாம் உண்ணுகிற துரித உணவுகளில் (fast food) என்னென்ன அசைவ பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்..

சாலட்
சைவம்தானே என நினைத்து நாம் பெரிதும் விரும்பி உண்ணும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் மட்டும்தானே இருக்கும் என கண்ணை மூடி ரசித்து.. ருசித்து.. சுவைத்து சாப்பிடுகிறீர்களா? ருசிக்காக அதில் இணைக்கும் சோஸில் முட்டை சேர்க்கப்பட்டுள்ளது. அட நான் சாப்பிகின்ற சோஸில் முட்டையா?! இல்லவே இல்லை என வாதம் செய்கிறீர்களா... எல்லாவிதமான சோஸும் முட்டை கலந்துதான் தயாராகிறது. 

சூப்
கடையில் வாங்கிக் குடிக்கும் சூப்புக்கு மட்டும் எப்படி மனமும்.. சுவையும் தூக்கலா இருக்கிறது நாக்கை சப்புக் கொட்டி மழை நேரத்தில் சிலாகிக்கிறீங்களா? அந்த சூப்பில் கலந்திருக்கும் சோஸில் சுவை மற்றும் மணத்திற்காக மீனில் இருந்து தயாராகும் சுவையூட்டிகள் கலந்திருக்கின்றது.

சீஸ்
தோசையில் இருந்து 2K கிட்ஸ் விரும்பி உண்ணும் பீட்ஸா வரை சீஸ் இன்றி உணவே இல்லை என்கிற அளவுக்கு சீஸ் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்த சீஸில் விலங்குகளின் குடல்களில் இருந்து எடுக்கப்பட்ட என்சைம்ஸ் என்கிற நொதி கலந்திருக்கிறது.

நாண் எனப்படுகிற ரொட்டி
நாண் சாப்பிடுகிற ‘நான்’ சைவம்தான். அதிலென்ன அசைவம் இருக்கப் போகிறது என யோசிக்காதீர்கள்? இறுதி வரை பசைத் தன்மையோடு இருப்பதற்காக நாணில் முட்டை அதிகமாக சேர்க்கப்படுகிறது.

ஜெல்லி
கலர்ஃபுல் தோற்றமும், நொளுநொளுன்னு கவர்ச்சி காட்டுற ஜெல்லி குழந்தைகளின் ஃபேவரைட். இந்த ஜெல்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான ஜெலட்டின் பவுடர் முற்றிலுமாக விலங்கின் கொழுப்பில் இருந்தே தயாராகிறது.

வெள்ளை சீனி
இனிப்பு இல்லாத ஸ்வீட்டே இல்லை. அந்த சீனியில் என்ன அசைவம் இருக்கப்போகிறது என நினைக்கிறீங்களா? கரும்பில் இருந்து தயாராகி சுத்திகரிக்கப்படும் சர்க்கரையில் விலங்குகளின் எலும்பில் இருந்து தயாராகும் நேச்சுரல் கார்பன் இணைக்கப்படுகிறது. விலங்குகளின் கருகிய எலும்பே இந்த கார்பன்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்
கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக் கிழங்கு சிப்ஸ் அசைவ உணவுதான். இதில் சுவைக்காக சேர்க்கப்படும் சிலவகை ஃபிளேவர்ஸ் சிக்கன் கொழுப்பில் தயாராகிறது.

குளிர்பானங்கள்
சிலவகை குளிர்பானங்களில் விட்டமின்-டி அதிகம் உள்ளது என நினைத்து வாங்கிப் பருகுவோம். இதில் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட லிமோனின் சேர்க்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய்
இதயத்திற்கு நல்லதென விளம்பரம் செய்யப்படும் சமையல் எண்ணெய்களில் ஒமேக-3 உள்ளதென லேபிளில் போடப்பட்டிருக்கும்.  ஒமேகா-3 மீன்களில் இருந்து பெறப்பட்டே எண்ணெயில் தயாராகி இணைக்கப்படுகிறது.

பீர் மற்றும் வயின்
உலகின் மிக விலை உயர்ந்த பீர் மற்றும்  வயின் தயாரிப்பில் அதனை தெளிவுபடுத்த மீன்பசை கூழ் அல்லது மீனின் நீர்பை பயன்படுத்தப்படுகிறது. 

இனி உணவுப் பொருள் பக்கட்டுக்களை பிரித்து சாப்பிடுவதற்கு முன்பு பக்கெட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை தெளிவா படித்து பார்த்விட்டு, நீங்கள் உண்ணப்போகும் உணவு சைவமா அசைவமா என்பதை தீர்மானியுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்