ரயில்வே தொழிற்சங்க சம்மேளனம்  ஏற்பாடு செய்திருந்த அடையாள வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் ஊடாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க சம்மேளனத்தின் நிறுவுனர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளதாக ஜானக பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.