மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (நவ.20) மதியம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பணப்பைகள் திருடுவதும் ஆலய பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களின் வீடுகளில் திருடுவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (20) மதியம் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மக்களினால் குறித்த இளைஞன் மடக்கி பிடிக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை கோயில் வளாகத்தில் வாகனம் ஒன்றை உடைத்து திருட முற்பட்ட போது மக்கள் அவரை துரத்திச் சென்றபோது தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று குறித்த நபர் ஆலய வளாகத்தில் நடமாடிய போது மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM