அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் ஜோபைடன் பேத்திக்கு திருமணம்

Published By: Digital Desk 3

21 Nov, 2022 | 12:34 PM
image

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமிக்கு, வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். வொஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர் ஆவார். 

Carolyn Kaster—AP

28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நடந்தது. 

ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். 

ஜனாதிபதி குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும். 


Carolyn Kaster—AP

அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்ச்சி இதுவாகும். 

1812 ஆம் ஆண்டில் தற்போது வரை வெள்ளை மாளிகையில் வெறும் 19 திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - ஈரான் மோதல் அச்சம்...

2026-05-16 13:55:22
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்...

2026-05-16 11:46:56
news-image

லெபனான் - இஸ்ரேல் போர்நிறுத்தம் மேலும்...

2026-05-16 09:58:42
news-image

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

2026-05-15 18:43:40
news-image

கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல்:...

2026-05-15 16:44:41
news-image

வீட்டின் மீது விழுந்து விமானம் தீப்பற்றி...

2026-05-15 14:01:29
news-image

"அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன": சீனாவில்...

2026-05-15 14:20:42
news-image

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் எரிபொருள்...

2026-05-15 12:40:02
news-image

அமெரிக்கா - சீனா இடையே புதிய...

2026-05-15 09:10:39
news-image

லத்வியாவில் அரசியல் நெருக்கடி: பிரதமர் எவிகா...

2026-05-15 08:56:54
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறி நுழைந்தவர்களால் ஈரானிய...

2026-05-14 16:04:20
news-image

ஒரு பயணம், ஒரு டிக்கெட்: ஐரோப்பிய...

2026-05-14 16:48:13