நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்பட டீசர் வெளியீடு !

By Digital Desk 2

21 Nov, 2022 | 09:47 AM
image

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா, தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் 'கனெக்ட்' என்ற  திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கிவுள்ளார்.  இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஹாரர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'கனெக்ட்' படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.   தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

'கனெக்ட்' திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 22-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53