யாழ். வடமராட்சியில் நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

By Nanthini

21 Nov, 2022 | 09:50 AM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் நேற்று பிற்பகல் கடலில் நீராடிவிட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராட வந்த 15 வயது சிறுமியொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி  கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.

சிறுமியோடு நீராடிய நண்பர்கள் சிறுமி நீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்டு கூக்குரலிட, அருகிலுள்ள இராணுவத்தினர் அச்சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அலன்மேரி ஆனந்தராஜா எனும் 15 வயதுடையவர் ஆவார். 

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் - ஐநா...

2023-02-01 14:52:27
news-image

பஸ் , ரயில் பயணிகளுக்கு டிக்கெட்டுகளுக்குப்...

2023-02-01 14:18:24