முன்னாள் தேசிய நல்லிணக்க அமைச்சரும், முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சரும், முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் செல்ல அனுமதிப்பதா இல்லையா என எதிர்வரும் திங்கள் அன்று ஆராய்வதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது.

கருணா அம்மான் சார்பில் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு பிணை கோரப்பட்ட நிலையிலேயே நீதிவான் இதனைத் தெரிவித்தார்.