(இராஜதுரை ஹஷான்)
அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவது தற்போதைய நிலையில் அத்தியாவசியமானது.
பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டங்களையும்,அரசியல் செயற்பாடுகளையும் தற்காலிகமாக பிற்போடுமாறு ஆளும் கட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தினோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் செய்யும் நிலையில் நாடு தற்போது இல்லை.பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தால், சேறு பூசல்கள் மாத்திரமே மிகுதியாக இருக்கும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில பிரபல்யமான தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை வெளிப்படை தன்மையுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், எமக்கும் இடையில் அரசியல் கொள்கை வேறுபாடு உண்டு.நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்ட போது அவர் மாத்திரம் தான் சவால்களை தற்துணிவுடன் பொறுப்பேற்றார்.
பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு அரசியல் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் முயற்சி துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும், ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்க்கட்சியினர் செயற்ட வேண்டும்.
அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவது தற்போதைய நிலையில் அத்தியாவசியமானது.
பொதுஜன பெரமுனவின் கூட்டங்களையும்,அரசியல் செயற்பாடுகளையும் தற்காலிகமாக பிற்போடுமாறு ஆளும் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
தேர்தல் இடம்பெறும் காலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்துக் கொள்ளலாம்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
நாட்டில் ஸ்தீரமான அரசாங்கம் எதிர்காலத்தில் தோற்றம் பெற வேண்டுமாயின் பொருளாதார பாதிப்புக்கு குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM