பஷிலின் வருகையால் அரசாங்கத்திற்குள் நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 5

20 Nov, 2022 | 07:45 PM
image

(எம்.மனோசித்ரா)

பஷில் ராஜபக்ஷவின் வருகையுடன் அரசாங்கத்தினுள் அரசியல் நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் என்பது தெளிவாகிறது. பொதுஜன பெரமுனவில் அமைச்சுப்பதவிகளை கோரும் 10 பேருக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே பஷில் ராஜபக்ஷ மீண்டும் வருகை தந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ள பஷில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.

உண்மையில் அவர்களுக்கு பதிலாக குற்றத்தடுப்பு பிரிவினரே அங்கு சென்றிருக்க வேண்டும். விமான நிலைத்திலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரையில் அவ்வாறு எதுவும் இடம்பெறாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

பொருளாதாரக்குற்றமிழைத்த நபரை வரவேற்பதற்காக மாலையுடன் விமானம் நிலையம் சென்றவர்களின் மூளையை சோதனை செய்ய வேண்டும்.

பொதுஜன பெரமுனவிலுள்ள சிரேஷ்ட தலைவர்கள் மேலும் 10 அமைச்சுக்களை கோரிக் கொண்டிருக்கின்றனர். அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காகவா பஷில் ராஜபக்ஷ வருகை தந்துள்ளார் என்ற கேள்வி எழுகிறது.

அவ்வாறில்லை எனில் பிளவடைந்துள்ள பொதுஜன பெரமுனவை ஒன்றிணைப்பதற்காக வருகை தந்துள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது.

பஷில் ராஜபக்ஷவின் வருகையுடன் அரசாங்கத்தினுள் பாரிய அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறவுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.

அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியில் பொதுஜன பெரமுன பல குழுக்களாகப் பிளவடைந்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38