தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்துக்கு - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்

Published By: Digital Desk 5

20 Nov, 2022 | 10:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற இரண்டு விடயங்களையும் பாதுகாக்கும் வகையில் சமாந்திரமான சட்டம் ஒன்றை அமைத்து வருகின்றோம். அதுதொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டம் கொண்டுவர எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் கொண்டுவருவதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

அதன் பிரகாரம் இதுதொடர்பாக விசேட நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு, சட்டவரைபு தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதனால் இதுதொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை.

அத்துடன் பயங்கரவார தடைச்சட்டத்தை நீக்குவதாக நாங்கள் தெரிவிப்பதனை யாரும் பிழையாக விளங்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதல்ல. நாங்கள் தயாரிக்கும் புதிய சட்டமூலத்துக்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் அரசியல் பழிவாங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை நாங்கள் பயன்படுத்தியதில்லை. 2015இல் இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரைக்கும் இந்த சட்டத்தை நாங்கள் செயற்படுத்தவும் இல்லை யாரையும் கைதுசெய்யவும் இல்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவர நிலைமையில், இரண்டு பேர் மாத்திரமே போராட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அந்த விடயமும் தற்போது தீர்க்கப்பட்டு, அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட்டு, சாதாரண சட்டத்தின் கீழே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற இரண்டு விடயங்களையும் பாதுகாக்கும் வகையில் சமாந்திரமான சட்டம் ஒன்றை அமைப்போம். இதுதொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் சில மாதங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01
news-image

தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி...

2024-05-29 00:12:16
news-image

யாழில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பொதுமக்கள்...

2024-05-28 23:52:36
news-image

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில்...

2024-05-28 20:44:18
news-image

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவே...

2024-05-28 20:32:41
news-image

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இருக்கும்...

2024-05-28 20:02:37