பிரான்ஸில் நீடிக்கும் காலணித்துவ மிருகத்தனம் 

Published By: Digital Desk 2

20 Nov, 2022 | 04:31 PM
image

(லத்தீப் பாரூக்)

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மக்ரோன் பிரான்ஸில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் யுத்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று அழைக்கப்படுவதை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான யுத்தமாக மாற்றியுள்ளார்.

‘உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ள மார்க்கம் இஸ்லாம். இதை நாங்கள் எங்கள் நாட்டில் பார்த்தக் கொண்டு இருக்கப் போவதில்லை’ என்று அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் உள்ள பள்ளிவாசல்களின் நிதிச் செயற்பாடுகள் மீதான கண்கானிப்பை அதிகரிப்பதன் மூலம் பிரான்ஸில் இஸ்லாத்தை வெளிநாடுகளின் செல்வாக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நெருக்கடியில் இருப்பது இஸ்லாம் அல்ல. ஜனாதிபதி மக்ரோனும் அவரது அரசுமே. 

இஸ்லாத்தை விடுவிக்க வேண்டும் என்ற நினைத்த பிரான்ஸ் ஆட்சியாளர்களில் மக்ரோன் முதலாவது நபர் அல்ல. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பிரசாரங்கள் பிரான்ஸில் முன்னெடுக்ககப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் பிரான்ஸ் அதிகாரிகள் தமக்குரிய ஒவ்வொரு சிவப்புக் கோட்டையும் தாண்டி உள்ளனர் என்று மனித உரிமைக் காவலர்களும் முற்போக்கு சிந்தனை குழுக்களும் தெரிவித்துள்ளன. 

அங்கு, இஸ்லாமிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் கண்கானிப்புக்கு உள்ளாக்கி, அரசாங்கத்துக்கு அப்பாறபட்ட வகையில் சுதந்திரமாக நிறுவனங்களை கொண்டிருக்கக் கூடிய எல்லா சாத்தியங்களையும் முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கின்றனர். 

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இஸ்லாத்துக்கு எதிரான போராக மாற்றி அதன் பின்னர் அதனைப் பிரிவினைவாத யுத்தமாக மாற்றி பிரான்ஸின் அரசியல், கலாசார மற்றும் சமூக ரீதியான உண்மையான வரலாற்று தாராளவாத பின்னடைவை ஏற்படுத்தகின்றனர்.

ஜனாதிபதி மக்ரோனின் ஆட்சியின் கீழ் பொதுவாக தேவையற்ற விதத்தில் ‘இஸ்லாமியவாத’ அல்லது ‘கிளர்ச்சிவாத’ என்று பெயரிடப்பட்ட குழுக்களை நோக்கிய உண்மையானதோர் அழிப்புமுறை அமுல் செய்யப்பட்டு வருவதை நாம் காண முடிகின்றது.

ஆனால் உண்மையில் பிரான்ஸ் செய்ய வேண்டியது என்னவென்றால் உலகம் முழுவதும் அவர்கள் முன்னெடுத்த கடுமையான கொள்ளைகளுக்கும் மனிதப் படுகொலைகளுக்குமாக செலுத்த வேண்டிய நட்டஈடுகளையும் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதாகும். அப்போதுதான் இஸ்லாத்துடன் பிரான்ஸுக்கு அதன் சொந்த நாட்டுக்குள் உள்ள சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும்.

2018ஆம் ஆண்டு முதல் ‘இஸ்லாமோபோபியா’ காரணமாக 26000 விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் வர்த்தகங்கள், முஸ்லிம் பாடசாலைகள், பள்ளிகள் என எல்லாவற்றையும் இலக்கு வைத்து இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக முஸ்லிம்களின் சுமார் 800 வளங்கள் ஒன்றில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சுமார் 55 மில்லியன் யூரோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரவான் பெர்ஷி என்ற பத்தி எழுத்தாளர், “ஜனாதிபதி மக்ரோனின் விழுமியங்கள் கவலைபடத்தக்க வகையில் உள்ளன. ‘அரசியல் இஸ்லாம்’ என்று ஐக்கிய அரபு அமீரகத்தால் அடையாளப்படுத்தப்பட்டு அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை மாதிரியை ஒத்ததாக இது அமைந்துள்ளது. பிரான்ஸ் அதன் சகாவைப்போல் தன்னிடம் உள்ள எந்தவொரு கருவியையும் கருத்து வேறுபாட்டை நசுக்கப் பயன்படுத்துகின்றது. மேலும் அதன் அநீதிகளை நியாயப்படுத்த அதற்கு தேவையான சமய ரீதியான போர்வையை வழங்குவதற்கு புதிய நிறுவனம் ஒன்றையும் வடிவமைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதை மீளுறுதி செய்யும் வகையில் பத்தி எழுத்தாளர் ஜோஸப் மஸாத் ‘இஸ்லாத்தை விடுவிக்க வேண்டும்’ என்று நினைத்த முதலாவது பிரான்ஸ் ஆட்சியாளர் அல்ல மக்ரோன். இது மிகப்பழைய பிரான்ஸ் சமயச்சார்பற்ற நிலையின் மரபு. 1798இல் நெப்போலியன் போனபார்ட் எகிப்தையும் பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்த போது எகிப்திய மக்கள் மத்தியில் பொய் உரைப்பதை தந்திரமாக கையாண்டார்.

அவரும், அவரது இராணுவமும் விசுவாசம் மிக்க முஸ்லிம்கள் என்று எகிப்திய மக்கள் மத்தியில் பொய்யான அறிவிப்பைச் செய்து கொடுங்கோல் ஆட்சியில் இருந்து முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விடுவிக்கவே தான் வந்துள்ளதாக கூறினார். 

ஆனால் இந்த ஏமாற்று திட்டம் பலிக்கவில்லை. எகிப்திய மற்றும் பலஸ்தீன மக்கள் அவருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். எகிப்திலும் பலஸ்தீனத்திலும் எண்ணற்ற கொடுமைகளை இழைத்த பின் அவர் தோல்வியோடு பிரான்ஸ் திரும்பினார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய நெப்போலியனதும் பிரான்ஸினதும் இஸ்லாத்துடனான சர்ச்சை ‘ஆக்ரே’ நகரில் பலஸ்தீன மக்களிடம் அவன் சந்தித்த தோல்வியில் இருந்து தொடங்குகின்றது. மூன்று தசாப்தங்களின் பின் பிரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமித்தபோது முஸ்லிம்களை வெற்றிகொள்ள அவர்களிடம் பொய்யுரைக்க வேண்டும் என்ற தேவை பிரான்ஸ{க்கு இருக்கவில்லை. மாறாக அவர்கள் முஸ்லிம்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து நாசத்தை விளைவித்து வழிபாட்டு இடங்களையும் துவம்சம் செய்தனர்.

உண்மையில் மக்ரோனின் அரசாங்கம் ஒட்டுமொத்த இஸ்லாமிய நெறிமுறைகளையும் சிந்தனைகளையும் பிரிவுகளையும் குற்றமயமாக்கி உள்ளது. பிரான்ஸில் முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு மட்டும் அன்றி பொதுவான சட்டத்தின் ஆட்சிக்கும் இது எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மக்ரோன் யுகத்தில் இரண்டு வகையான ‘இஸ்லாமோபோபியா’ நிலைப்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.

ஒன்று பொதுவாக முஸ்லிம்களை இலக்கு வைப்பது மற்றது முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்வியலை இலக்கு வைப்பது.

மக்ரோனின் ஆட்சியின் கீழ் புதிய பிரஞ்சு இஸ்லாமோபோபியா என்று அழைக்கப்படக் கூடிய விடயத்துக்கான எல்லா தர்க்க நியாயங்களும் செயற்பாடுகளும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுமையாக்கப்பட்டுள்ளன. மக்களை அச்சுறுத்துவதற்காக கற்பனையாக வடிவமும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹொஷாம் ஷாகர் என்ற பத்தி எழுத்தாளர், “பிரான்ஸ் அதன் உலகளாவிய கீர்த்தி மற்றும் மென் அதிகாரம் என்பனவற்றை இழந்து வருகின்றது. அதன் பிம்மம் இப்போது ஆத்திரமூட்டல், வெறுப்பை தூண்டல் தார்மிக விழுமியங்களை சீர்குலைத்தல் என்பனவற்றோடு தொடர்பு படுத்தப்படுகின்றது. மக்ரோன் தனது முன்னோர்களில் காணப்பட்ட இஸ்லாத்தை தனிமைப்படுத்திய உணர்வற்ற மரபை அவர் தொடர்ந்து பின்பற்றுகின்றார்.

சமய அடிப்படைவாதத்தை காரணம் காட்டி சமயத்தை பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி அதனை செய்கின்றார். இதன் மூலம் அவர் அழற்சியை ஏற்படுத்தும் புதிய சொல்லாக ‘இஸ்லாமிய பிரிவினைவாதம்’ என்ற சொல்லையும் அறிமுகம் செய்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றார்.

அரபு வசந்த போராட்டத்தை அடுத்து மேற்குலக தலைவர்கள் தமது வார்த்தைகளை மேலதிக கவனம் செலுத்தி தேடிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இதுவாகும், எவ்வாறேனும் மக்கள் எழுச்சியை சந்தித்த இந்த நாடுகளில் மீண்டும் சர்வாதிகாரம் மீள ஸ்தாபிக்கப்பட்டதொரு புதிய அரசியல் யுகத்துக்கு சொந்தமானவராக மக்ரோன் காணப்படுகின்றார். 

இதனிடையே சமூக ஊடகங்களில் வெளியான பிரான்ஸ் கேலிச்சித்திரம் ஒன்று மக்கள் மத்தியில் பெரும்கோபத்தை தூண்டி உள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கட்டாரின் தேசிய உதைபந்தாட்ட அணியை கேலி செய்து  பிரான்ஸ் பத்திரிகையான லீ கனார்ட் என்செய்னி என்ற பத்திரிகையில் வெளியான இந்தக் கேலிச் சித்திரம் அரபு ஆண்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த நிலைமைகள் காரணமாக முன்னொருபோதும் இல்லாத எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பிரான்ஸை விட்டு வெளியேறி வருகின்றனர். இது பிரான்ஸின் மென்அதிகாரத்தில் புத்திஜீவிகளுக்கு தட்டுப்பாட்டு நிலையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இது அந்த நாட்டுக்கு கவலை தருமொரு இழப்பாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04