தனிப்பட்ட விருப்பங்களை அரச கொள்கையாக்க ஜனாதிபதி முயற்சி - சரித ஹேரத்

Published By: Nanthini

20 Nov, 2022 | 10:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

லாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது தனிப்பட்ட விருப்பங்களை அரச கொள்கையாக செயற்படுத்த முயற்சிக்கிறார்.

வரவு - செலவுத் திட்டத்தின் குறைபாடுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பல விடயங்களுக்கு நேரடியாக எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒருசில விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால், முழு வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்ட விளைவுகளை முன்னிலைப்படுத்தி வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார பாதிப்புக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்திக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஆகவே, இந்த வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் தவறு என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் கொள்கை பிரகடனத்தில் பல விடயங்களை உள்ளடக்கியிருந்தார். 

நட்டமடையும் அரச நிறுவனங்களை தொடர்ந்து அரசு நிர்வகிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். ஆகவே, நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து கடந்த ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தற்போது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கடந்த 14ஆம் திகதி சமர்ப்பித்து நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி எவ்விடத்திலும் இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் குறிப்பிடவில்லை. 

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை விடுத்து இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

லங்கா டெலிகொம் நிறுவனம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகிய அரச நிறுவனங்கள் இலாபமடைகின்றன. இந்த நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களாணை கிடையாது. பாராளுமன்றத்தின் மக்களாணை தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாகவே ஜனாதிபதி காணப்படுகிறார். ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பங்கள் அரச கொள்கையாக மாற்றமடையும்போது அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

வரவு - செலவுத் திட்டத்தில் காணப்படும் பிரதான குறைபாடுகளை இவ்வாரம் இடம்பெறும் குழுநிலை விவாதத்தின்போது சுட்டிக்காட்டுவோம். குறைகளை திருத்திக்கொள்ளாவிட்டால் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52