ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் கதைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்துக்கு தகுதி இல்லை. பொலநறுவை மாவட்ட பிராந்திய ஊடகவியளாளராக இருந்தேன் என மார்தட்டிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் இவ்வாறு ஊடக விழுமியங்களை குழி தோண்டி புதைப்பது மிகவும் வேதனைக்குறிய விடயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர பெரமுன தெரிவித்துள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது ஊடகத்தை கட்டுப்படுத்துவதால் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டுமெனவும் அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.