பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புகளை விடுத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் உரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி, தொழிற்சங்கங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

உரிய அமைச்சர்களிடத்தில் கலந்துரையாடி பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், தன்னிடம் நேரடியாக வந்து கலந்துரையாடும்படி ஜனாதிபதி இதன்போது அழைப்புவிடுத்துள்ளார்.