காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் உப மின்நிலையத்துக்கு அருகாமையில் உள்ள கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று சனிக்கிழமை (நவ 19) மாலை 6 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
இவ்வகழ்வு தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் பொகவந்தலாவ, கல்கந்த மற்றும் கேர்க்கஸ்வோல்ட் ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதான ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM