தோல்வி கற்றுத்தரும் பாடம்

Published By: Devika

20 Nov, 2022 | 12:30 PM
image

ழைப்பு, கல்வி, விளை­யாட்டு, வாழ்க்கை என எதுவாக இருந்­தாலும் அனைவரும் விரும்பு­வது வெற்றியைத் தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விட முடியாது. அதற்கு விடா முயற்சியும், தன்னம்­பிக்கையும் அவசியம். 

துவண்டு விடக் கூடாது 

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிகக் கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்­களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விடக் கூடாது. தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்­டது, அதிலிருந்து விடுபட என்ன வழி? என்றுதான் ஆராய வேண்­டும். மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுவதைக் காட்டிலும் அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.

ஏமாற்றம் 

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்கத் தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டு­பிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். 

வெற்றி தேவதை

எதிர்கால வெற்­றியை இலக்காக வைத்து உழைத்­­தால் தோல்வி­கள் தோற்­றுப்­போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலை­யிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக்­கொள்ள வேண்டும்.

எதிர்கால திட்டம் 

தோல்வியில் இருந்து பாடங்­களை கற்றுக்கொள்ள மறக்க வேண்டாம். தோல்விக்கான கார­ணங்களை அலசி ஆராயும்போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்­பாடுகள் மீதும், எதிர்கால திட்­டத்தி­லும் ஏதேனும் குறைகள் இருந்­தால் மறைக்காமல் ஒப்புக் கொள்­ளுங்கள். 

தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விடக் கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்­றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்­ கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்