பசில் ராஜபக்சவின் வருகை என்பது வேறுவிதமான காரணங்களை கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை தான் எமிரேட்ஸ் விமானத்தில் கொழும்பை வந்தடைவேன் என அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
பசில் ராஜபக்சவின் வருகையை உறுதிசெய்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தனது கட்சி தேர்தலிற்காக தயாராகின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இலங்கை வருகைக்கு முன்னதாக பசில் ராஜபக்ச உள்ளுராட்சி தேர்தலை மையமாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கான ஊடக பிரச்சாரத்தை ஆரம்பிப்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசியிருந்தார்.அச்சு இலத்திரனியல் ஊடகங்களில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜேவிபியை விட வலுவானது என்பதை வெளிப்படுத்த விரும்புவதாக பசில் ராஜபக்ச நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள தனது ஆதரவாளர்களிற்கு தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேரின் ஆதரவு பசில் ராஜபக்சவிற்கு கிடைக்கும்?
21வது திருத்தத்திற்கான வாக்கெடுப்பின் பின்னர் பசிலின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை மிகவும்குறைவடைந்துள்ளமை பரம இரகசியமில்லை.கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களே அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் கட்சியை வலுப்படுத்த அவர் விரும்பினால் அவர் முதலில் தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
இது இலகுவான செயற்பாடாக அமையாது கடந்த காலத்தில் பசில் ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்த அதிருப்தியால் கட்சி பிளவடைந்துள்ளதும் ஒரு காரணம்.கடந்த வாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
.sundaytimes.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM