தீயணைப்பு வாகனத்துடன் விமானம் மோதியதால் இருவர் பலி: பெரு விமான நிலையத்தில் சம்பவம்

Published By: Sethu

20 Nov, 2022 | 09:28 AM
image

தீயணைப்பு வாகனத்துடன் விமானம் மோதியதால் இருவர் பலி: பெரு விமான நிலையத்தில் சம்பவம் நாட்டில், விமான நிலைய ஓடு பாதையில் தீயணைப்பு வாகனமொன்றுடன் விமானம் மோதியதால் தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லீமாவில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றது.

பெருவின் ஜூலியாகா நகரை நோக்கி புறப்படுவதற்காக ஓடுபாதையில் விரைந்து கொண்டிருந்த LATAM   நிறுவனத்தின் பிளைட் LA2213 விமானம் இவ்விபத்தில் சிக்கியது. இதன்போது தீயணைப்பு வாகனத்திலிருந்த இருவர் உயிரிழந்தனர்.

எயார்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 102 பயணிகள் உட்பட 108 பேர் இருந்தனர். விமானத்திலிருந்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என மேற்படி விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விமனப் பயணிகளில் 20 பேருக்கு ககாயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பெரு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை 31 வயதான தீயணைப்பு வீரர் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெவித்துள்ளார்.

இவ்விமானத்தின் பின்பகுதி தீயினால் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

ஓடுபாதைக்குள் ஏன் தீயணைப்பு வாகனம் வந்தது என்பது தெரியவில்லை என விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து, மேற்படி விமான நிலைய செயற்பாடுகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை  (19) பிற்பகல் 1 மணிவரை இடைநிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5...

2026-09-16 17:17:00
news-image

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து...

2026-09-16 17:28:15
news-image

அமெரிக்காவில் செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஹெலிகொப்டர்...

2026-09-16 16:06:21
news-image

இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான்...

2026-09-16 14:35:20
news-image

மக்காவை இலக்குவைத்ததற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களை கண்டித்து...

2026-09-16 14:21:34
news-image

சக்கரம் கழன்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...

2026-09-16 11:54:31
news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38