தேசிய விருது வழங்கும் விழா

Published By: Ponmalar

19 Nov, 2022 | 05:49 PM
image

புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சும் இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலைகள், அதிபர்கள், மாணவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் நடைபெற்றது.

இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திருமதி கி. ஹேமலோஜினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிஷனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ், மட்டக்களப்பு காயத்திரிபீடம் கலாபூசணம் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கெனடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களின் திறமையினை வெளிக்கொணரும் வகையில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அறநெறி மாணவர்களுக்கு தேசிய ஆக்கத்திறன் விருதும், இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருதும் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 80 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் 29 ஆசிரியர்களும் 22 அறநெறிப்பாடசாலைகளுக்கும் இதன்போது தேசிய ஆக்கத்திறன் விருதும், தேசிய மேன்மை விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

-பட்டிருப்பு நிருபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலிஸ்...

2024-10-09 19:11:35
news-image

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை!

2024-10-09 19:04:59
news-image

கண்டி ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்தில்...

2024-10-09 18:55:43
news-image

“ஞயம்பட உரை” கலாசார நிகழ்வு  

2024-10-09 17:36:07
news-image

நாதத்வனி வயலின் கலாலய மாணவர்களின் “வயலின்...

2024-10-09 16:56:39
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் 18ஆவது ஆண்டு விழாவை...

2024-10-09 12:19:20
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-08 18:04:34
news-image

கலைகள் சங்கமிக்கும் 'ஆவர்த்தனா'வின் "நாத பரதம்"

2024-10-09 18:00:22
news-image

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு...

2024-10-08 15:07:57
news-image

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி...

2024-10-08 08:49:42
news-image

இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் 'கலாலயா’...

2024-10-07 14:57:33
news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56