சுற்றுலா வீசா ஊடாக வெளிநாடு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தம் : அப்புஹாமியின் கேள்விக்கு ஜகத் புஸ்பகுமார பதில்

Published By: Nanthini

19 Nov, 2022 | 09:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சுற்றுலா வீசா ஊடாக ஓமான் நாட்டுக்கு சென்ற பெண்கள் தொடர்பில் பணியகத்துக்கு பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் வெளிவிவகாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலா வீசா ஊடாக வெளிநாடு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (நவ 19) பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடிய போது இலங்கை பணிப்பெண்கள் ஓமான் நாட்டில் பகிரங்க ஏலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஓமான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்கள் சுற்றுலா வீசா ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல், முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் சென்றுள்ளார்கள்.

இவர்கள் சுற்றுலா வீசா ஊடாக இலங்கையில் இருந்து டுபாய் நோக்கிச் சென்று, அங்கிருந்து ஓமான் சென்றுள்ளார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இவர்கள் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலா வீசா ஊடாக வெளிநாடுகளுக்கு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மீண்டும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி  ஓமான் நாட்டில் இலங்கை பணிப்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் பதில் பாரதூரமானது. 

வெளிநாட்டு பணியகத்தில் பதிவு செய்யவில்லை என்பது இரண்டாம் பட்ச விவகாரம்.

பகிரங்கமான முறையில் இலங்கை பெண்கள் ஏலத்தில் விற்கப்படுகிறார்கள். ஆகவே இவர்களை இலங்கை பிரஜைகளாக கருதி உரிய நடவடிக்கையை எடுங்கள் என வலியுறுத்தினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அரசியல் ரீதியில் பிரபல்யமடையும் வகையில் இங்கு கருத்துரைக்க வேண்டாம். இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல், இடைத்தரகர் ஊடாக முறையற்ற வகையில் சென்றுள்ளார்கள்.

இவ்விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. முறையற்ற வகையில் செல்லும் போது பணியகத்தினால் பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், இவர்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வெளிவிவகாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19