குடிக்க தண்ணீர் மற்றும் பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு வருகின்றனர்.

ஹசன்ஷாம் அகதி முகாமிலே குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒருவருக்கு 2 வயதும் மற்றொருவருக்கு 9 வயதாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இராணுவ படைக்கும், ஐ.எஸ் குழுவிக்கும் இடையில் நடந்த சண்டையின் போது மோசூல் நகரில் உள்ள 6 இலட்சத்து 50 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு நீர் வழங்கும் குழாய் சேதமடைந்துள்ளது.

எனினும், குறித்த இடத்தில் தொடர்ந்து போர் இடம்பெற்றுவருகின்றமையால் யுத்தத்தினால் சேதமடைந்த நீர் வழங்கும் குழாயை சரி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.