ஏனைய நாடுகளுக்கு கஞ்சா சிறந்ததெனில் ஏன் நாம் அங்கீகாரம் வழங்கக்கூடாது - டயனா கமகே

Published By: Nanthini

19 Nov, 2022 | 09:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

லாசாரம், பாரம்பரியம் என்ற காரணிகளை காலங்காலமாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றது மாத்திரம் மிகுதியாகியுள்ளது. 

ஏனைய நாடுகளுக்கு கஞ்சா சிறந்ததாயின், ஏன் நாம் அங்கீகாரம் வழங்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே சபையில் வலியுறுத்தினார்.

தாய்லாந்து தேரவாத பௌத்த நாடு. ஆனால், அவர்கள் கஞ்சாவை பயிர்ச்செய்கை செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாம் புதையலுக்கு மேல் இருந்துகொண்டு பிற நாடுகளிடம் கையேந்தி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம்.

இனியாவது இதனை திருத்திக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு போராடினேன். எனது போராட்டம் குறித்து அவதானம் செலுத்தி, கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தில் பரிந்துரைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கி ஏற்றுமதி செய்து, அதனூடாக முதலீடுகளை பெற்றுக்கொள்ள முன்வைத்த யோசனைக்கு எதிராக எதிர்தரப்பின் உறுப்பினர்களும் ஆளுந்தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் எதிராக கருத்துரைப்பது கவலைக்குரியது. 

உலக நடப்புக்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். கஞ்சா பயிர்ச்செய்கையினால் கிடைக்கும் வருமானம் பற்றி சிந்தியுங்கள்.

தாய்லாந்து கடந்த ஜூன் மாதம் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கியது. இதற்கான யோசனையை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் முன்வைத்தார். 

நிறைவடைந்த ஐந்து மாத காலத்துக்குள் கஞ்சா பயிர்ச்செய்கை ஊடாக தாய்லாந்து 280 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் 450 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளார்கள்.

நாடு என்ற ரீதியில் மோசமான நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின், இவ்வாறான தீர்மானத்தை எடுக்க வேண்டும். 

நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே ஜனாதிபதி எனது திட்டத்துக்கு கவனம் செலுத்தியுள்ளார்.

கஞ்சா தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட கருத்தை வரவேற்கிறேன். கஞ்சா பயிர்ச்செய்கையினால் கிடைக்கும் வருமானம் மற்றும் ஆயர்வேத நலன் தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட வகுப்பு நடத்த வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கலாசாரம், பாரம்பரியம் என்ற காரணிகளை காலங்காலமாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றது மாத்திரம் மிகுதியாகியுள்ளது.

ஏனைய நாடுகளுக்கு கஞ்சா சிறந்ததாயின், ஏன் நாம் அங்கீகாரம் வழங்கக்கூடாது. தாய்லாந்து தேரவாத பௌத்த நாடு. ஆனால், அவர்கள் கஞ்சாவை பயிர்ச்செய்கை செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாம் புதையலுக்கு மேல் இருந்துகொண்டு பிற நாடுகளிடம் கையேந்தி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம். இனியாவது இதனை திருத்திக்கொள்ள வேண்டும்.

தாமரை கோபுரத்தை வெள்ளை யானை என விமர்சித்தார்கள். தாமரை கோபுர நிர்மாணிப்புக்கு 114 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 87 மில்லியனை சீனா வழங்கியுள்ளது. சீனாவுக்கு 67 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.

 2024ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சீனாவுக்கு அந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். தாமரை கோபுரத்தை ஒன்றிணைத்த ஒரு பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. 

நான் முதலீட்டை கொண்டு வந்தேன். சுற்றுலாத்துறைக்கு தேவையான முதலீடுகளை நாட்டுக்காக கொண்டு வருவேன்.

ஊழல் மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரினால் கலாசார நிதியம் மோசடி செய்யப்பட்டமை பற்றி பேசுங்கள்.

3000 இலட்சம் மோசடி செய்யப்பட்டதை மறைக்கக்கூடாது. அரச அதிகாரிகளினால் இடம்பெற்ற மோசடிகளை எதிர்வரும் காலங்களில் பகிரங்கப்படுத்துவோம்.

எனக்கு எதிராக திட்டமிட்ட வகையில் சேறுபூசல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. போலியான குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. 

ஐக்கிய மக்கள் சக்தியின் புண்ணியத்தால் நான் பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுகிறார். என் புண்ணியத்தில் அவர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை அவர் அறியவில்லை. 

ஆகவே, விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08