அடுத்த ஆண்டு முதல் உரத்திற்கு பதிலாக பணம் வழங்க தீர்மானம் ; அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல்

Published By: Digital Desk 3

19 Nov, 2022 | 03:16 PM
image

(எம்.மனோசித்ரா)

உரத்திற்கு பதிலாக, அதனைக் கொள்வனவு செய்வதற்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான செயற்திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் , உரம் தொடர்பில் செயற்படும் மேலதிக பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் கலந்துரையாடலின் போது, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரத்தை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. குறிப்பாக யூரியா தேவையானளவு முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள உரத்தை முறையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. அதேபோன்று உர விநியோகம் தொடர்பில் விவசாயிகளால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் அடுத்த வருடம் முதல் உரத்தை வழங்குவதற்கு பதிலாக, அதனைக் கொள்வனவு செய்வதற்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான யோசனை தொடர்பிலும் இதன் போது தீர்க்கமாக அவதானம் செலுத்தப்பட்டது. இதன் பலன் நேரடிhக விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே ஜனாதிபதியினுடைய நிலைப்பாடுமாகும். இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:17:31
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07