சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை, இப்படத்தை தயாரித்துவரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் காட்சித் துணுக்காக வெளியிட்டிருக்கிறது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படம் 'ஜெயிலர்'.
இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் கன்னடத்து சுப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகை பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
அக்ஷன், என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காணொளியை காட்சித் துணுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸாக தோன்றுவதால் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM