கலஅக்கல பகுதியில் சட்டவிரோத முறையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் வைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவரை இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.