கலாச்சார சீர்க்கேடுக்கு இனிமேல் இடமளிக்கப்போவதில்லை : ஜனாதிபதி

Published By: Raam

28 Dec, 2015 | 11:16 AM
image

கொழும்பில் அண்மையில் வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போது, பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேலும் இடமளிக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றியபோது, பெண்கள் உள்ளாடைகளை கழற்றி மேடையை நோக்கி வீசியதாக தெரிவித்துள்ளார். இதன்பின்னர் இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50,000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன, உள்ளே நுழைந்ததும் டிக்கெட்டின் விலைக்கமைய மதுப்பானம் வழங்கப்பட்டுள்ளதோடு அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.

இது தொடர்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது. நாட்டில் கலாச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால் அது தொடர்பில் பேசவேண்டியுள்ளது.

ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்நிகழ்வில் நமது இளைஞர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. 

உலகப் பிரசித்தி பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias)  பங்குபற்றிய 'ENRIQUE IGLESIAS LIVE IN COLOMBO" என்ற குறித்த நிகழ்ச்சியை  இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33