ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளங்களை தனியாா் மயமாக்குவதற்கு  எதிரான ஆா்ப்பாட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து  இன்று காலை ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக  ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இருந்தபோது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணம் குறித்த  எதிா்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

காலை 9 மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆா்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் காற்றுடன் கூடிய மழை காரணமாக குறித்த ஆா்பபாட்டத்தை தாங்கள் பிற்போட்டுள்ளதாகவும் விரைவில் பிாிதொரு  தினத்தில் எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது தொடா்பில் அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்