தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகன நகரில் தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் பிரேத பரிசோதனை நேற்று (17) கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.
துப்பாக்கியால் சுட்டதனால் ஏற்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் கசிந்ததன் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
திகன பிரதேசத்தின் பிரபல வர்த்தகரான டான் மங்கள குணவர்தன, தனது வர்த்தக நிலையத்துக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், பல கோடி ரூபாக்களை வட்டிக்கு கொடுத்தவர் என்றும் பல தொழில்களையும் நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது பணிப்பெண்கள் இருவர் மற்றும் சாரதி ஆகியோர் அலுவலகத்தில் இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM