கர்ப்ப கால தோல் பராமரிப்பு

Published By: Ponmalar

18 Nov, 2022 | 02:51 PM
image

உணவு கருவுற்ற பெண்கள் பச்சை நிறத்திலான கீரை வகைகள், பச்சைநிற காய்கறிகள், முழு தானியங்களை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முழு தானியங்கள் என்றால் அதிகம் பொலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. 

புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். 

அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.

அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. 

கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். 

கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மொய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். 

சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். 

ஹோமோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம். தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும். புத்துணர்ச்சியையும் தரும். 

அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. 

இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் கலாநிதி...

2026-07-18 11:21:51
news-image

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ‘அவளின் சந்தை’...

2026-07-11 12:34:25
news-image

பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக ‘சுவர்யா’ –...

2026-02-06 17:17:33
news-image

தூரிகை வழியே துளிர்க்கும் மனிதாபிமானம்:  ஓவியக்கலைஞர்...

2026-01-07 13:36:05
news-image

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது மனிதகுலத்தின்...

2025-11-25 12:32:03
news-image

அப்பா! : சிறுகதை

2025-08-01 16:03:56
news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03