சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாமைக்கு பிரதான காரணம் ஆளும் கட்சியே - மைத்திரி

Published By: Digital Desk 2

19 Nov, 2022 | 06:41 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்கு பிரதான ஆளும் கட்சி தடையாக செயற்பட்டதாலேயே சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (நவ. 18) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் கடினமான திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கொண்டுள்ள சமூக பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளக்கு தீர்வு காண வேண்டுமாயின் முக்கிய நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

மனித உரிமைகள் அனைத்து விடயங்களுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை அனைவரும் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பண்டாரநாயக்காவின் ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறாயின் 1948 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான  அரசாங்கத்தின் செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

சுற்றுச் சூழலுக்கு பொருத்தமான பசுமை பொருளாதாரம்,டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கது.பசுமை பொருளாதார திட்டத்தை செயற்படுத்த துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார பாதிப்பால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகளும்,மீனவர்களும் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள். விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் இதுவரை முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. 

பொருளாதார பாதிப்பிற்கு யார் காரணம் என பரிசோதனை நடத்தாமல் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்துவது காலத்திற்கு  பொருத்தமானதாக அமையும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்ட வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை  ஸ்தாபிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொறுப்புடன் செயற்பட்டார்.

தற்போதைய ஜனாதிபதியும் பொறுப்புடன் செயற்பட்டார். ஆனால் ஆளும் கட்சியினர் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துரதிஸ்டவசமாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24