இந்தியாவில் முதல் தடவையாக தனியார் நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட ரொக்கெட் இன்று ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ரொக்கெட்டை ஏவியது.
ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று முற்பகல் 11.30 மணிக்கு இந்த ரெக்கெட் ஏவப்பட்டது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ரொக்கெட்டுக்கு விக்ரம் எஸ் (Vikram S) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித்துறை தந்தை விக்ரம் சாராபாயின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6 மீற்றர் உயரமான இந்த ரொக்கெட் 545கிலோகிராம் எடையுடையது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தின் இந்த விண்வெளித் திட்டத்துக்கு ப்ராரம்ப் (Prarambh) என பெயரிடப்பட்டுள்ளது.
80 கிலோமீற்றர் உயரத்துக்கு இந்த ரொக்கெட் செல்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது 89 கிலோமீற்றர் உயரத்தை அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் ரொக்கெட்டை ஏவும் நிகழ்வில் இந்தியாவின் அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கும் கலந்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM