அண்மையில் கிளிநொச்சி நகரில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (நவ 17) கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி நகரின் மின்சார சபைக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையமொன்றின் அருகே அண்மையில் இரவு வேளையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
படுகாயமடைந்த குடும்பஸ்தர் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவந்த போது இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்துள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சந்தேக நபர் ஒருவரை நேற்று கொழும்பில் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM