'நவரச நாயகன்' கார்த்திக் சிறிய இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் 'தீ இவன்' படத்தின் டீசரை கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டிருக்கிறார்.
'ரோஜா மலரே', 'அடடா என்ன அழகு', 'சிந்துபாத்' ஆகிய படங்களின் இயக்குநர் டி.எம். ஜெயமுருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் 'தீ இவன்'.
இதில் நவரச நாயகன் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ராதாரவி, சுமன், சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா, 'சேது' அபிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வை.என். முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு தயாரிப்பாளரான டி.எம். ஜெயமுருகன் இசையமைத்திருக்கிறார்.
தமிழக மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவான இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி. நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரேயொரு பாடலுக்காக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடனமாடியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது.
பாடலுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் இப்படத்தின் டீசர், படப்பிடிப்பு வளாகத்திலேயே வெளியிடப்பட்டது. இதனை கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டார்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்,
''நவரச நாயகன் கார்த்திக்கின் திறமையை இந்தப் படத்தில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறேன். நமது தமிழ் சமூகம் கலை, கலாசாரம், உறவுகளுடன் கட்டமைக்கப்பட்டது. அத்தகைய கலாசாரம் இன்று பல்வேறு வகைகளில் சீரழிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த முழுமையான விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடத்தில் ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் ஒரே ஒரு பாடலுக்காக நடிகை சன்னி லியோன் நடனமாடியிருக்கிறார். இந்தப் பாடலும் படமும் அனைவரையும் கவரும் என நம்புகிறேன்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM