அதிக ஊழியர்கள் ராஜினாமா: டுவிட்டர் அலுவலகங்கள் உடனடியாக மூடப்பட்டன

Published By: Sethu

18 Nov, 2022 | 10:36 AM
image

டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் உடனடியாக அமலுக்கு வரும் வiகியல் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21 ஆம் திகதி வரை 2 வாரங்களுக்கு இந்த அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் கடினமாக வேலை செய்ய வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க்  உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு இணக்கம் தெரிவிக்கும் விசுவாச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 5 மணி வரை (இலங்கை, இந்திய நேரப்படி வெள்ளி காலை 3.30 மணிவரை) அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து பெரும் எண்ணிக்கையான ஊழியர்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், டுவிட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தீர்மானத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க், கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். 

அதன்பின் உயர் அதிகாரிகள் பலரையும் பதவியிலிருந்து நீக்கிய அவர், அந்நிறுவனத்தின் 7500 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து பணியாற்றும்  திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டுவந்தார். 

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ‍செலவிடப்பட்ட பணத்தை ஈடுசெய்வதற்கு இலோன் மஸ்க் திணறி வருகிறார்,

தொடர்புடை செய்தி

நீண்ட நேரம் வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்: டுவிட்டர் ஊழியர்களுக்கு இலோன் மஸ்க் காலக்கெடு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51