திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வைத்தியசாலைக்கு உடன் சென்றுள்ளனர். கடந்த மாதம் 25ம் திகதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். 

இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில்; சிகிச்சை பெற்று வரும் நிலையில், திமுக தலைவரும் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.