(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்திருந்தும் அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதியை எதிர்வரும் திங்களன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய வேண்டும் என நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.
மொஹம்மட் சமீர் எனும் நபருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் நுவரெலியா மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு வந்த போதும், பிரதிவாதியை நீதிமன்ரில் ஆஜர் செய்ய சிறைச்சாலைகள் அதிகாரிகள் தவறியிருந்தனர்.
அத்துடன் சட்ட மா அதிபர் சார்பிலான பிரசன்னமும் இருக்கவில்லை. பிரதிவாதிக்காக சட்டத்தரணி இம்தியாஸ் வஹாபுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பிரசன்னமாகியிருந்தார்.
இந் நிலையிலேயே பிரதிவாதியை எதிர்வரும் திங்களன்று நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என நுவரெலியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM