(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மலையகத்தில் இருக்கும் தேயிலை நிலங்கள்தான் நாட்டுக்கு பிரச்சினையாக இருக்கின்றது என்றால் அதனை முற்றாக அழித்து விடுங்கள்.
அப்போது எமது மக்கள் நிம்மதியாக வேறு தொழில்களில் தங்களை வளர்த்துக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரவு செலவு திட்டத்தில் மலையகத்தில் எமது சமூகம் தொடர்பாக ஒரே ஒரு விடயம்தான் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, தேயிலை பயிரிடப்படுகின்ற நிலங்களை வேறு ஏற்றுமதி பயிர்களுக்காக ஒதுக்கி வழங்கவேண்டும் என்ற விடயம் மாத்திரமே இருக்கின்றது.
மலையகத்தில் இருக்கும் தேயிலை நிலங்கள்தான் இன்று நாட்டுக்கு பிரச்சினையாக இருக்கின்றது என்றால் அதனை முற்றாக அழித்து விடுங்கள். அப்போது எமது மக்கள் நிம்மதியாக வேறு தொழில்களில் தங்களை வளர்த்துக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.
அத்துடன் மலையக பகுதியில் இருப்பவர்களில் அரைவாசியானவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு ஒருவேளை, உணவை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யுனிசெப் அமைப்பு தெரிவித்திருக்கும் நிலையில், இந்த வரவு செலவு திட்டத்தில் இந்த மக்களுக்கு எந்த தீர்வும் இல்லை.
வெற்றாக இருக்கக்கூடிய நீங்கள் செத்து மடியுங்கள் என்று தெரிவிப்பது போன்ற நிலைமையைத்தான் வரவு செலவு திட்டம் எடுத்துக்காட்டு கின்றதை கவலையுடனேனும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் மலையகத்தில் வறுமைநிலை நூற்றுக்கு 53வீதத்துக்கும் அதிகமாக சென்றிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் மலையக சமூகம் தொடர்பாக இன்னும் கூடுதலாக சிந்தித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று அடுத்த வருடமாகும்போது இந்த வறுமை நிலைமை குறைத்துக்கொள்ள இந்த வரவு செலவு திட்டத்தில் தீர்வுகள் இருக்கின்றதா என நாங்கள் பார்க்கவேண்டும்.
உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலமே வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். உணவு பணவீக்கம் 85,6வீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வரவு செலவு திட்டத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நாங்கள் பார்க்கவேண்டும்.
மேலும் நாட்டுக்கு வருமானத்தை தேடிக்கொள்ளும் வழிகளை தெரிவிக்கும்போது பெருந்தோட்ட தேயிலை தொழிற்சாலைகள் மூலமே நாட்டுக்கு அதிக டொலர்களை பெறுவதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் தேன்னை, கஞ்சா செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதும் தேயிலை பயிர்சைகையை அபிவிருத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கபடாமல், தேயிலை பயிர்சைகையை அழிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM