அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள்

Published By: Ponmalar

17 Nov, 2022 | 05:24 PM
image

நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது. 

ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். 

வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும். 

இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். 

சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும். 

ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்: 
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, பெ. சீரகம், சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். 

பழங்கள்: 
ஒரேஞ்ச், எலுமிச்சை, பப்பாளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏப்பம் வருவது குறையும். 

புதினா மற்றும் ஏலக்காய் டீ: 
கொதிக்கும் தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம். வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும். இதனால் ஏப்பம் வருவது குறையும். 

பெருங்காயம்: 
சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். 

தயிர்: 
தயிரில் உள்ள நன்மை செய்யும் பக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை. 

பூண்டு: 
பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும். எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04