இந்தியாவில் முதன்முறையாக நடனத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
இதன் அறிமுக விழா சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இயக்குநர் பாலாவின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், ஜே.கே.பிரசன்னா, மிருதுளா ஸ்ரீதரன் ஆகிய மூவரின் இயக்கத்தில் பத்து அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் வலைத்தள தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'.
இந்தத் தொடரில் வளரிள பருவ நட்சத்திரங்களான 'லட்சுமி' பட புகழ் டிட்யா சாகர் பாண்டே முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் கேசவ் எனும் நடிகரும் அறிமுகமாகிறார். இவர் நடிகை வாணி போஜனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவேக் ஜோக்தாண்டே, நடிகர் நாகேந்திர பிரசாத், 'பசங்க' ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைத்தளத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
நடனப் போட்டியை மையப்படுத்திய இந்த வலைத்தள தொடரை தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஹித்தேஷ் தாகூர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
நவம்பர் 18ஆம் திகதி அன்று ஜீ5 என்னும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த வலைத்தள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த தொடரை அறிமுகப்படுத்தும் விழாவில் ராஜூ சுந்தரம், ஸ்ரீதர், நாகேந்திர பிரசாத், பர்வேஷ் உள்ளிட்ட முன்னணி நடன இயக்குநர்கள் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந்த வலைத்தள தொடர் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் பேசுகையில்,
''நடத்தை மையப்படுத்தி இந்தியாவில் இதற்கு முன் வலைத்தள தொடர் வெளிவரவில்லை.
மேலும் நடனப் போட்டியை மையப்படுத்தி வலைத்தள தொடரொன்றை உருவாக்க முடியும் என்ற எண்ணத்தை 'நடனப்புயல்' பிரபுதேவா எம்முள் உருவாக்கினார்.
அவரின் எண்ணத்தை நானும் இயக்குநர்கள் பிரசன்னா மற்றும் மிருதுளா ஆகியோர் இணைந்து சாத்தியப்படுத்தி இருக்கிறோம்.
கீழ்த்தட்டு வகுப்பை சேர்ந்த நடன குழுவுக்கும், மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த நடன குழுவுக்கும் இடையே நடைபெறும் வளரிளம் பருவத்தினருக்கான சர்வதேச போட்டியை முன்னிலைப்படுத்தி இந்த தொடர் தயாராகி இருக்கிறது.
பத்து அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த வலைத்தள தொடரின் முதல் அத்தியாயம் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது. நிறைய புதுமுகங்களுடன், புதிய முயற்சியை இளம் தலைமுறை ரசிகர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம். ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM