நாட்டில் மீண்டும் போராட்டத்தை ஏற்படுத்த முயற்சி - சாகர காரியவசம்

Published By: Digital Desk 2

17 Nov, 2022 | 05:20 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)

பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் ஏதும் கிடையாது.

நாட்டில் மீண்டும் போராட்டத்தை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியினரும், முன்னிலை சோசலிச கட்சியினரும் முயற்சிக்கிறார்கள். உண்மை நிலைவரத்தை அறிவார்ந்த மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்பு,வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமரப்பிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும் தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்கள் ஆதரவு ஊடாக ஆட்சிக்கு வர முடியாத அரசியல் தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடுகளில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் ஏதும் கிடையாது, குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்ற கலவரம், 30 ஆண்டு கால யுத்தம் நாட்டை பின்னோக்கி சென்றது. பொருளாதார பாதிப்பு இவ்வாறான காரணிகளினால் தீவிரமடைந்தது.

பொருளாதார பாதிப்பை மக்கள் விடுதலை முன்னணி அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தது. நாட்டில் மீண்டும் போராட்டத்தை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியினரும்,முன்னிலை சோசலிச கட்சியினரும் முயற்சிக்கிறார்கள். போராட்டங்களினால் பொருளாதார பாதிப்பிற்கு தீர்வு காண முடியாது என்பதை அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவார்கள்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துக் கொள்வதை இளைஞர் யுவதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முடியாதவர்கள் இளைஞர்களை பலியாக்கி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும்,ஆட்சியாளர்களும் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடும் தரப்பினர் இதுவரை எவ்வித  சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை மாறாக பொய் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொள்கிறார்கள்.

அரசியல்வாதிகள் அரச நிதியை மோசடி செய்திருந்தால் உரிய நடவடிக்கையை எடுங்கள், நடைமுறையில் உள்ள சட்டங்கள் தடையாக காணப்பட்டால் புதிய சட்டத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33