புத்துணர்ச்சிகான டிப்ஸ்

Published By: Ponmalar

17 Nov, 2022 | 05:17 PM
image

தினசரி வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையாக இருப்பது முக்கியமானது. காலையில் எழும் போது நாம் செய்யும் சில செயல்கள் இந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். 

இசைக்கலைஞர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் போன்றோர் தொடர்ந்து பயிற்சி எடுத்து தங்களை மேம்படுத்தி வெற்றிபெறுவார்கள். அதை போலவே மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் நாள் முழுவதும் நல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் காலையில் எழும்போது மகிழ்ச்சியான நேர்மறை எண்ணங்களை தூண்டுவது அவசியமானது. 

படுக்கையை விட்டு எழும்போது விரிப்புகளை ஒழுங்குபடுத்துவது எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருக்க உதவும். படுக்கை ஒழுங்காகவும், அழகாகவும் இருப்பது மனதுக்கு அற்புதமான உணர்வை தந்து காலை பொழுதை அழகாக்கும். 

காலையில் சுற்றுச்சூழல் மிகவும் அமைதியாக இருக்கும். இந்த நேரத்தில் நேர்மறை ஆற்றல் வளிமண்டலத்தில் பரவும். எனவே காலையில் எழுந்தவுடன் தோட்டத்தில் நடப்பது, எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது போன்றவைற்றை வழக்கமாக்கி கொள்ளவும். இது நம் உடலை புத்துணர்வாக வைப்பதற்கு உதவும். 

உடல் புத்துணர்ச்சி பெறுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கார்போவைத்ரேட் புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்ணுங்கள். காலை உணவுதான் அன்றைய நாளுக்குரிய ஆற்றலின் முக்கிய ஆதாரம். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.

இன்று நாம் என்ன செய்ய வேண்டும். என்பதை முன்பே முடிவு செய்து வேலையை தொடங்குவது நல்லது. எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை ஆரம்பிப்பது, பெரும்பாலான பிரச்சினைகளை உண்டாக்கும். இதனால் மனதும், உடலும் சோர்வடையும். 

நேரம் இருக்கும் போது பிடித்தமான இசை, பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்கலாம். இது அந்த நாளை பயனுள்ளதாக மாற்றும். மனது சரியாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும். ஒவ்வொரு நாளும் 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நல்ல முறையில் நேரம் செலவிடுவது உளவியல் ரீதியாக நம்மை மேம்படுத்தும். 

விழித்திருக்கும் நேரம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தூங்குவதும் முக்கியம். மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு 8 மணிநேரம் தூக்கம் அவசியம். மேற்சொன்னவற்றை எல்லாம் கடைப்பிடித்தால் நீண்ட ஆரோக்கியத்துடனும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்